Published : 17 Nov 2020 13:14 pm

Updated : 17 Nov 2020 13:14 pm

 

Published : 17 Nov 2020 01:14 PM
Last Updated : 17 Nov 2020 01:14 PM

அமெரிக்காவில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

michigan-and-washington-state-on-sunday-imposed-new-restrictions-on-gatherings

அமெரிக்காவில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்காவில் கரோனா பாதிப்பு ஒரு கோடியைக் கடந்துள்ளது. தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மிச்சிகன், வாஷிங்டன் ஆகிய மாகாணங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் மூன்று வாரங்களுக்குப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜூலை மாதத்துக்குப் பிறகு அமெரிக்காவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை பரவியது போன்று, தற்போது நாள்தோறும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் பணியாக புதிய மருத்துவ வல்லுர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

தவறவிடாதீர்!

AmericaCorona virusCoronaOne minute newsஅமெரிக்காகரோனா வைரஸ்கரோனா நோய் தொற்றுகரோனா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x