Published : 16 Nov 2020 04:38 PM
Last Updated : 16 Nov 2020 04:38 PM

இத்தாலியில் மீண்டும் கரோனா தீவிரம்

இத்தாலியில் கரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து இத்தாலி ஊடகங்கள் தரப்பில், “இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 33,979 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,78,529 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 546 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் இதுவரை 45,229 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் பல மாகாணங்களில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கரோனா இரண்டாம் அலை தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறும் மருத்துவ நிபுணர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.

இத்தாலியில் இவ்வாண்டின் தொடக்கத்தில் கரோனா பரவல் தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு ஊரடங்கு பரந்த அளவில் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொருளாதாரம் சரிந்தது. எனவே, இம்முறை நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x