ஈரானில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு

ஈரானில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு
Updated on
1 min read

ஈரானில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 11,780 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 11,780 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஈரானில் சில மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று இதுவாகும்.

ஈரானில் இதுவரை 7,15,068 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 39,664 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் 27 மாகாணங்களில் கரோனா தொற்று தீவிரமாக இருப்பதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானில் சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in