Published : 10 Nov 2020 16:29 pm

Updated : 10 Nov 2020 16:29 pm

 

Published : 10 Nov 2020 04:29 PM
Last Updated : 10 Nov 2020 04:29 PM

பிரிட்டனில் கரோனா தடுப்பு மருந்து கட்டாயம் இல்லை: அமைச்சர் தகவல்

people-in-britain-will-be-able-to-decide-whether-they-want-to-have-the-coronavirus-vaccine

பெரும்பாலானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து தேவை இருப்பதால் பிரிட்டனில் அதைக் கட்டாயமாக்கும் திட்டம் இல்லை என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மட் ஹன்காக் தெரிவித்துள்ளார்.

“பெரும்பாலான மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தின் தேவை இருக்கும்போது, அதைக் கட்டாயமாக்கப் போவதில்லை. மேலும், குழந்தைகளுக்குக் கரோனா தடுப்பு மருந்து கட்டாயம் கிடையாது. ஏனெனில் குழந்தைகள் கரோனா வைரஸால் குறைந்த அளவே பாதிக்கப்படுகிறார்கள்” என்று மட் ஹன்காக் தெரிவித்துள்ளார்.


இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்தது. உயிரிழப்பும் நூற்றுக்கணக்கில் உயர்ந்தது. இதையடுத்து அங்கு கரோனா வைரஸ் 2-வது அலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் கரோனா தொற்றால் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையை நெருங்கியுள்ளன.

தவறவிடாதீர்!

பிரிட்டன்கரோனா தடுப்பு மருந்துகரோனா வைரஸ்கரோனா நோய் தொற்றுOne minute newsCorona virusCorona

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x