சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை: இலங்கை அமைச்சர் உறுதி

சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை: இலங்கை அமைச்சர் உறுதி
Updated on
1 min read

இலங்கை சிறைகளில் உள்ள தமிழர்கள் விஷயத்தில் முக்கியமாக அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகும், அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் பலர் பல ஆண்டுகளாக சிறைகளில் உள்ளனர். இந்நிலையில் இக்கைதிகள் தங்களுக்கு நீதி வேண்டி சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

இதையடுத்து இன்று காலை இலங்கை நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே நேற்று கொழும்பு சிறைக்கு சென்று கைதிகளை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். எனினும் அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதியளிக்க வேண்டுமென்று கைதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக கடந்த திங்கள்கிழமை முதல் 200-க்கும் மேற்பட்ட தமிழ் கைதிகள் உண்ணாவிரத போரட்டம் மேற்கொண்டனர். இதில் 8 பேர் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் கைதிகளாக உள்ள தமிழர்களில் சுமார் 40 பேர் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். அவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு 2009-ம் ஆண்டு முதல் ஏரளமான தமிழர்கள் உரிய விசாரணையின்றி சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்க முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக முந்தைய ராஜபக்சே அரசு இதற்கு காரணம் கூறியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in