

ரஷ்ய போர் விமானங்கள் எங்கள் வான் எல்லைக்குள் வரக் கூடாது என்று துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா சமீபத்தில் கள மிறங்கியது. இதையடுத்து சிரியா வில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் மீது ரஷ்ய போர் விமானங்கள் குண்டுகளை வீசி வருகின்றன. ரஷ்ய விமானங்கள் சிரியாவின் அண்டை நாடான துருக்கி வான் எல்லை வழியாக பறந்து சென்று தாக்குதல் நடத்துவதாக தெரிகிறது.
இதையடுத்து தங்கள் வான் எல்லையில் அத்துமீறி பறந்த ஒரு ரஷ்ய போர் விமானத்தை இடைமறித்து தடுத்துவிட்டதாக வும், இனி இதுபோன்ற ரஷ்ய விமானங்கள் தங்கள் எல்லைக் குள் வந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.
சிரியா அதிபர் ஆசாதுக்கு ஆதர வாக ரஷ்யா போரிட்டு வரும் நிலை யில், ஆசாத் பதவி விலகினால் சிரியாவில் நிலைமை மேம்பட்டு விடும் என்று துருக்கி கூறி வரு கிறது. இதுவே ரஷ்ய போர் விமா னங்களுக்கு துருக்கி எதிர்ப்பு தெரிவிக்க முக்கிய காரணமாகும்.
இது தொடர்பாக துருக்கி வெளி யுறவு அமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், போர் விமானங்கள் அத்துமீறும் விவ காரத்தில் ஏதாவது விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தால் அதற்கு ரஷ்யா தான் பொறுப்பு என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை துருக்கி யின் தெற்கே உள்ள ஹடாய் மாகாணம் வழியாக ரஷ்யாவின் இரு எப்16 ரக போர் விமானங் கள் பறந்ததாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.
அதே நேரத்தில் ரஷ்யாவின் வான் தாக்குதலை சிரியா வர வேற்றுள்ளது. ஐஎஸ் தீவிரவாதி களை முறியடிக்க ரஷ்யா உறுதி யான நடவடிக்கைகளை எடுத்துள் ளது என்று சிரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.