Published : 07 Nov 2020 01:15 PM
Last Updated : 07 Nov 2020 01:15 PM

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தரப்பில், “ஜப்பானில் இன்று (சனிக்கிழமை) சுசிமா தீவை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோ மீட்டர் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுவிக்கப்படவில்லை. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 15,000க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 1 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

4 டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இடத்தில் ஜப்பான் அமைந்திருப்பதால், ஆண்டொன்றுக்கு உலகில் ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஜப்பானில் மட்டும் 20% நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x