சிரிய பிரச்சினையை அமெரிக்க - ரஷ்ய போராக மாற்ற வேண்டாம்: ஒபாமா

சிரிய பிரச்சினையை அமெரிக்க - ரஷ்ய போராக மாற்ற வேண்டாம்: ஒபாமா
Updated on
1 min read

சிரியா விவகாரத்தில் அமெரிக்கா மீதான ரஷ்யாவின் தொடர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்க, இதனை இரு நாடுகளின் மறைமுக போராக மாற்ற வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், சிரியாவில் நடுநிலையான கிளர்ச்சியாளர்களுக்கு தங்களது ஆதரவு நீடிக்கும் என்பதையும், சிரிய அதிபர் பஷர் அல் அசாதுக்கு எதிராக அமெரிக்கா நிலைப்பாடு கொண்டிருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் விதத்தில் பேசினார்.

இது குறித்து மேலும் அவர் கூறும்போது, "ரஷ்யா மீதான புத்திசாலித்தனமான முடிவாக சிரியா விவகாரத்தை அமெரிக்கா எடுத்துக்கொள்ளவில்லை. சிரியாவில் பிரச்சினை ஆரம்பித்த தருணத்திலிருந்து அந்நாட்டு அதிபருக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம்.

தற்போது புதிதாக ஐ.எஸ். இயக்கத்துக்கும் தீவிரவாதத்துக்கும் எதிராக செயல்படுவதாக கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பின், நாடகத்தனமான ஆரம்பத்தை ரஷ்யா நடத்துகிறது.

இதில் அமெரிக்காவை குற்றம்சாட்டிக் கொண்டிருப்பதை புடின் நிறுத்த வேண்டு. ரஷ்யாவின் நடவடிக்கை ஐ.எஸ்-ஐ வலுப்படுத்தவே செய்யும். ஆசாதுக்கு ஆதரவாக ஈரானுடன் இணையும் ரஷ்யாவுக்கு பின்விளைவுகள் மோசமானதாக அமையும். இது புதைச் சேற்றில் சிக்கிக் கொள்வதற்கு சமம்.

இத்தகைய தொடர் செயல்பாடுகள் சிரியாவில் அமெரிக்கா - ரஷ்யா இடையிலான மறைமுகப் போரை ஏற்படுத்தும்" என்றார்.

ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புடின், சிரியா அதிபர் பஷர் அல் ஆசாதுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், அவருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக அமெரிக்காவும் மாறுபட்ட கொள்கைகளை திட்டவட்டமாக தெரிவித்தன. இரு நாடுகளும் பல ஆண்டுகளாக விரோதப் போக்கையே கடைபிடிக்கும் நிலையில், சிரியா உள்நாட்டு விவகாரத்தில் தற்போதல் மீண்டும் மோதல் போக்கை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in