Published : 06 Nov 2020 13:10 pm

Updated : 06 Nov 2020 13:10 pm

 

Published : 06 Nov 2020 01:10 PM
Last Updated : 06 Nov 2020 01:10 PM

புதினுக்கு பார்க்கின்சன் நோய்: அடுத்த வருடம் பதவி விலகுகிறார்?

vladimir-putin-may-step-down-next-year-because-of-health-reasons-claims-report

ரஷ்ய அதிபர் புதின் உடல்நலக் குறைவு காரணமாக அடுத்த வருடம் பதவியிலிருந்து விலகக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ரஷ்ய அதிபர் புதின் பார்க்கின்சன் ( மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாவது) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்த வருடம் புதின் தனது பதவியிலிருந்து விலகக்கூடும். 68 வயதான புதின் தொடர்ந்து கால் மற்றும் கைகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வலியை உணர்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதினின் இரு மகள்களான மரியாவும், கத்ரினாவும் தந்தையின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு அவரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் அதிபராக 2036 ஆம் ஆண்டு வரை புதின் பதவி வகிப்பதற்கு கடந்த ஜூலை மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ரஷ்யாவில் அதிபர் பதவியில் இருப்பவர், தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. இந்த நிலையில் புதின் ரஷ்யாவில் செல்வாக்கு மிக்க நபராகத் தொடர்வதால், அவரை அதிபர் பதவியில் மேலும் தொடர வைப்பதற்கான சட்டத் திருத்தத்திற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

மக்களது விருப்பத்தை அறிய இது தொடர்பான வாக்கெடுப்பு நாடு முழுவதும் நடந்தது. இதில் 77.93% பேர் ரஷ்ய அதிபராக புதின் 2036 ஆம் ஆண்டுவரை தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 21.6% பேர் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து 2036 ஆம் ஆண்டுவரை ரஷ்யாவின் அதிபராக புதின் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

ரஷ்யாரஷ்ய அதிபர்புதின்நோய்பதவி விலகக் கூடும்Vladimir PutinPutinHealth reasons

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x