

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் அதிக வாக்குகளைப் பெற்ற சாதனையை ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் நிகழ்த்தியுள்ளார்.
வெறுப்படைந்த அதிபர் ட்ரம்ப் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார், மோசடி நடந்ததாக புகார் எழுப்பியுள்ளார், ஆனால் அதற்கான எந்த வித ஆதாரங்களும் அவரிடம் இல்லை, வெறுமனே பைடனின் வெற்றி அறிவிப்பை ஒத்தி வைக்க சூழ்ச்சி செய்வதாகவே அமெரிக்க ஊடகங்களில் சில தெரிவிக்கின்றன.
கடைசி நிலவரப்படி ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளையும் ட்ரம்ப் 213 வாக்குகளையும் பெற்றதாக ஒரு சில அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்க 253 213 என்று சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜோ பைடன் பெரிய அளவில் வெற்றி பெற மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் 7.20 கோடி வாக்குகளைப் பெற்று அமெரிக்க அதிபருக்கான சாதனையை நிகழ்த்தியுள்ளார் பைடன்.
2008-ல் ஒபாமாவுக்கு அதிகபட்சமாக 6.95 கோடி வாக்குகள் கிடைத்ததே இதுவரை அதிகம். அதிபர் ட்ரம்ப் 6.8 கோடி வாக்குகள். கடந்த தேர்தலை விட 40 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் ட்ரம்ப்.