Published : 04 Nov 2020 12:39 PM
Last Updated : 04 Nov 2020 12:39 PM

நம்பிக்கையுடன் இருங்கள்; நாம் வெற்றி பெறுவோம்: ஜோ பைடன்

நம்பிக்கையுடன் இருங்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 வாக்குகளைப் பெறுபவரே அதிபராக முடியும். ஃபாக்ஸ் நியூஸ் தகவல்களின் படி 538 தேர்தல் சபை வாக்குகளில் பைடன் 207, ட்ரம்ப் 148 வாக்குகளைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மாறாக சிஎன்என் தொலைக்காட்சி, 192 தேர்தல் சபை வாக்குகளைப் பைடன் பெற்றுள்ளார் என்றும், ட்ரம்ப் 108 வாக்குகள் பெற்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, பைடன் 133 தேர்தல் சபை வாக்குகளையும், ட்ரம்ப் 115 வாக்குகளையும் பெற்றதாகத் தெரிவித்துள்ளது.

முக்கிய மாகாணங்களான ஒஹையோ, புளோரிடாவில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். பல மாகாணங்களில் ஜோ பைடன் முன்னிலை வகித்தாலும், ட்ரம்ப் தொடர்ந்து கடும் போட்டியைக் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் வில்மிங்டனில் ஜோ பைடன் தன் ஆதரவாளர்களிடம் கூறும்போது, “நம்பிக்கையுடன் இருங்கள். நாம் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம். நான் நம்புகிறேன். கடைசி ஓட்டு எண்ணப்படும்வரை இது முடிவடையாது" என்றார்.

எழுபத்தேழு வயதாகும் ஜோ பைடன் வெற்றி பெற்றால் அதிபர் தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும், எழுபத்து நான்கு வயதாகும் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றால் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும் சரித்திரம் படைக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x