

2016- அதிபர் தேர்தலில் ஒஹையோ மாகாணத்தைக் கைப்பற்றிய குடியரசுக் கட்சித் தலைவர் டொனால்டு ட்ரம்ப் 2020 அதிபர் தேர்தலிலும் ஒஹையோ மாகாணத்தை வெற்றி பெற்று தக்க வைத்துள்ளார்.
இந்த மாகாணத்தில் 18 தேர்தல் சபை வாக்குகளை ட்ரம்ப் பெற்று தக்கவைத்துள்ளார்.
மேலும் இந்த மாகாணத்தில் ட்ரம்ப் 53.3% வாக்குகளைப் பெற கடும் சவால் அளித்து இடையில் முன்னிலையெல்லாம் வகித்த ஜோ பைடன் 45.2 % வாக்குகளைப் பெற்றார்.
இன்னொரு முக்கிய மாகாணமான அரிசோனாவில் பைடன் முன்னிலை வகிப்பதாக ஃபாக்ஸ் செய்திகள் கூறுகின்றன. இங்கு 11 தேர்தல் சபை வாக்குகள் உள்ளன.
ஆனால் குடியரசுக் கட்சியினர் இதை மறுத்து வருகின்றனர். அரிசோனா மாகாண முடிவுகள் தேர்தல் முடிவுகளை மாற்றும் வல்லமை கொண்டது. இங்கு வெற்றிபெற்றால் அதிபர் தேர்தல் வெற்றி பைடனுக்கு எளிதாகும் என்கின்றனர் வல்லுநர்கள்.
இங்கு ட்ரம்ப் 2016-ல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.