Published : 03 Nov 2020 06:10 PM
Last Updated : 03 Nov 2020 06:10 PM

அமெரிக்க அதிபர் தேர்தல்: நியூயார்க், நியூஜெர்சி, வர்ஜீனியா மாகாணங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது

உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. 9 கோடிக்கும் அதிகமானவர்கள் முன் வாக்குப்பதிவு முறையைப் பயன்படுத்தி வாக்களித்துள்ளனர். 6 கோடிக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் ஜோ பிடனே முன்னிலையில் இருந்து வருகிறார். புளோரிடா, பென்சில்வேனியா, அரிசோனா, விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பிடனுக்கே அமோக ஆதரவு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் நியூயார்க், நியூ ஜெர்சி, வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. அப்பகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை தொடங்கும் என்றும் வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எழுபத்தேழு வயதாகும் ஜோ பிடன் வெற்றி பெற்றால் அதிபர் தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும், எழுபத்து நான்கு வயதாகும் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றால் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும் சரித்திரம் படைக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x