

தேர்தல் பிரச்சாரங்களில் வாக்காளர்களிடம் உரையாடிய காட்சிகளை வீடியோ தொகுப்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) 6 கோடிக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்க உள்ளனர். பதிவான வாக்குகள் புதன்கிழமை முதல் எண்ணப்படும் என்றும் தேர்தல் முடிவு வியாழக்கிழமை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் ஜோ பிடனே முன்னிலையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களில் வாக்காளர்களிடம் உரையாடிய காட்சிகளை வீடியோ தொகுப்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ட்ரம்ப் தனது கைகளை மடித்துக்கொண்டு நடனமாடுகிறார். அவரது ஆதரவாளர்கள் கைகளைத் தட்டி அவருக்குத் தங்களது ஆதரவவைத் தெரிவிக்கின்றனர்.