

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை கொலை செய்ய இந்தியாவின் ரா உளவுத் துறை சதித் திட்டம் தீட்டியிருப்பதாக அந்த நாட்டின் பஞ்சாப் மாகாண அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக பஞ்சாப் மாகாண உள்துறை சார்பில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத் துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருப்ப தாக டான் நாளிதழ் தெரிவித் துள்ளது.
பிரதமர் நவாஸ் ஷெரீப், ஜமா-உத்-தவா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் முகமது சையது ஆகியோரை கொலை செய்ய இந்தியாவின் ரா உளவுத் துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக தங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக பஞ்சாப் மாகாண உள்துறை தெரிவித்துள்ளது.
ஜமா-உத்-தவா இயக்க தலைவர் ஹபீஸ் முகமது சையது கடந்த 2008 மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். அவருக்கு எதிரான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்துள்ளது. ஆனால் அவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவுகிறார்.
தனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசிடம் ஹபீஸ் கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் நவாஸின் சிறப்பு செயலாளர் முஸ்தாக் மாலிக் அளித்த பேட்டியில், பிரதமரை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.