

மத்திய வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இதுவரை 27 பேர் பலியாகினர். பலர் மாயமாகி உள்ளனர்.
இதுகுறித்து வியட்நாம் தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில், “வியட்நாமில் மோலாவே புயல் தாக்கியதில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மத்திய வியட்நாமில் மட்டும் 27 பேர் பலியாகினர். 50 பேர் மாயமாகினர். 67 பேர் காயமடைந்தனர்.
வியட்நாமில் குவாங் ட்ரை, துவா தியன், ஹியூ, குவாங் நம் ஆகிய மாகாணங்களில் கடுமையான மழை பதிவாகியுள்ளது. பல தேசிய நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 63 பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 10,000க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு வியட்நாமில் இத்தகைய சேதத்தை மோலாவே புயல் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வியட்நாமில் அடுத்த வாரமும் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கரோனா
வியட்நாமில் 1,177 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,062 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் பலியாகி உள்ளனர்.