2030-ம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிக்க வளர்ந்த நாடுகளின் நிதியுதவி தேவை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

2030-ம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிக்க வளர்ந்த நாடுகளின் நிதியுதவி தேவை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்
Updated on
1 min read

‘‘ஐ.நா. கொண்டு வந்துள்ள பொது வான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு சர்வதேச நிதியுதவி தேவைப்படுகிறது.’’ என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர துணை பிரதிநிதி பகவந்த் சிங் பிஷ்னோய் கூறியுள்ளார்.

வரும் 2030-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் வறுமை ஒழிப்பு, எல்லோருக்கும் மின்சார வசதி, கழிவறை வசதி, ஆண் பெண் சமத்துவம் உட்பட பல்வேறு இலக்கு களை அடைவதற்கான கொள்கை ஐ.நா.வில் கடந்த மாதம் நிறை வேற்றப்பட்டது. இந்நிலையில், சமூக பிரச்சினைகள் குறித்த ஐ.நா. பொதுச் சபை குழு கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. அதில் பகவந்த் சிங் பிஷ்னோய் பேசியதாவது:

ஐ.நா.வின் 2030-ம் ஆண்டுக் குள்ளான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு, ஒவ்வொரு நாட்டுக் கும் வெவ்வேறு விதமான பொறுப்பு கள் உள்ளன. எல்லா தீர்வுக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கை இருக்க முடியாது.

ஐ.நா.வின் இலக்குகளை 2030-க்குள் அடைவதற்கு வளரும் நாடுகளுக்கு நிதி ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. எனவே, அதை ஈடுகட்ட சர்வதேச அளவில் நிதியுதவி தேவைப்படு கிறது. வளர்ந்த நாடுகள் நிதி வழங்க முன்வரவேண்டும்.

கடந்த 1995-ம் ஆண்டு கோபன்ஹேகனில் இதேபோல் பொதுவான வளர்ச்சி இலக்குகளை முன்வைக்கப்பட்டது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் சர்வதேச அளவில் வளர்ச்சியை பார்த்தோமானால், ஏற்றத் தாழ்வுகள் இருப்பதை அறியலாம். எங்களால் கொடுக்க முடியாது. அதேவேளையில் வறுமை ஒழிப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்போம். பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு சமூக பொருளாதார வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார். ‘அனைவருட னும் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காகவும்..’ என்ற நோக்கத்துடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியாவில் மோடி தலைமையில் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இவ்வாறு பகவந்த் சிங் பிஷ்னோய் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in