

கவுதமாலா நாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.
கவுதமாலா நாட்டின் தென்கிழக் குப் பகுதியான சான்டா கேத்ரினா பினுலா பள்ளத்தாக்கில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங் களில் நேற்றுமுன்தினம் நிலச் சரிவுகள் ஏற்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் மண்ணில் புதையுண்டன.
அந்த கிராமங்களில் மோப்ப நாய் உதவியுடன் ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிர தேடுதல் வேட்டையில் இது வரை 131 உடல்கள் மீட்கப்பட்டுள் ளன. மேலும் 500 பேரை காண வில்லை. அவர்களும் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.