

இலங்கையை அமெரிக்கா நட்பு நாடாக பாவிக்கின்ற அதே வேளையில் சீனா இலங்கையை வேட்டையாடி சுரண்டத் துடிக்கிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, கொழும்புவில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனேவைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உலகின் சகல வல்லமையும் பொருந்திய நட்பு நாடாக இலங்கை உள்ளது. இந்திய-பசிபிக் பிராந்திய சுதந்திரச் சின்னமாக இலங்கை உருவாக வாய்ப்புள்ளது.
இந்தச் சூழலில்தான் இந்திய-பசிபிக் பகுதியில் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் சீனா இலங்கையை வேட்டையாடி சுரண்டத் துடிக்கிறது.
ஆனால் அமெரிக்கா அப்படியல்ல, இலங்கையை நட்பு நாடாகவே பார்க்கிறது. ஜனநாயக மாண்புகளைப் பாதுகாக்க அமெரிக்கா இலங்கைக்கு எப்போதும் உதவும், என்றார் பாம்பியோ.
தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடி வருகிறது, அதற்கு இலங்கையையும் துணைக்கு அழைக்கிறது சீனா. இந்நிலையில்தான் மைக் பாம்பியோ இலங்கை வந்திருக்கிறார்.
இதனையடுத்து இலங்கை-சீனா உறவுகளில் அமெரிக்கா தலையிடுவதாக சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.