காஷ்மீர்தான் முக்கிய பிரச்சினை: பாகிஸ்தான் திட்டவட்டம்

காஷ்மீர்தான் முக்கிய பிரச்சினை: பாகிஸ்தான் திட்டவட்டம்
Updated on
1 min read

இந்தியா, பாகிஸ்தான் இடையே காஷ்மீர்தான் முக்கிய பிரச்சினை என்று ஐ.நா. சபையில் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஐ.நா. சபையில் இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின் றன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பேச் சுக்கு பதில் அளித்து ஐ.நாவுக்கான பாகிஸ்தான் தூதர் பிலால் அகமது பொதுசபை கூட்டத்தில் பேசிய தாவது:

அமைதிப் பேச்சுவார்த்தையை தீவிரவாத நடவடிக்கைகளின் மூலம் இந்தியா தடுத்து நிறுத்தி வருகிறது. அந்த நாடு பகைமையை வளர்த்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே காஷ்மீர் விவகாரம்தான் முக்கிய பிரச்சினை. இதனை வெற்று கோஷம் மூலம் மாற்றிவிட முடியாது. எதிர்கால பேச்சுவார்த்தையின் போதும் காஷ்மீர் விவகாரத்தை பிரதானமாக எழுப்புவோம்.

இந்தியாவுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயற்சிகள் மேற் கொண்டார். ஆனால் இந்திய தரப் பினர் அதனை நிராகரித்துவிட்டனர்.

பலூசிஸ்தான், கராச்சி ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு இந்தியா ஆதரவளித்து வருகிறது. குறிப்பாக பழங்குடியினப் பகுதி களில் ஆதிக்கம் செலுத்தும் தெஹ் ரிக்-இ-தலிபான் தீவிரவாத அமைப் புக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in