பெண்களைப் பாலியல் கடத்தலில் ஈடுபடுத்திய போலிப் பாதிரியாருக்கு 120 ஆண்டுகள் சிறைத் தண்டனை: நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு

படம்: ட்விட்டர் உதவி
படம்: ட்விட்டர் உதவி
Updated on
1 min read

பெண்களைப் பாலியல் கடத்தலில் ஈடுபடுத்திய அமெரிக்காவைச் சேர்ந்த கேத் ரானியர் என்ற போலிப் பாதிரியாருக்கு 120 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரபரப்பான தீர்ப்பை நியூயார்க் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்காவைச் சேர்ந்த 60 வயதான கேத் ரானியர் என்ற போலிப் பாதிரியார் NXIVM என்ற அமைப்பை நடத்தி வந்தார். இதில் பெரும் பணக்காரர்களும், பிரபலமானவர்களும் நிதி அளித்து வந்தனர். இந்த நிலையில் கேத் ரானியர் தனது அமைப்பில் சேர்ந்த பெண்களைப் பாலியல் கடத்தலில் ஈடுபடுத்தி அவர்களது உடலில் தனது பெயரை அச்சிட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நிக்கோலஸ் கரப்சிஸ், கேத் ரானியரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 120 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேத் ரானியரின் குற்றம் இரக்கமற்ற செயல் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தான் குற்றமற்றவர் என்று கேத் ரானியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in