சீனாவில் தியாகிகள் தினம் அனுசரிப்பு

சீனாவில் தியாகிகள் தினம் அனுசரிப்பு
Updated on
1 min read

சீன சுதந்திரப்போராட்டத்துக்காக உயிர் நீத்த வீரர்களின் நினைவாக தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தியானென்மென் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லீ கெகியாங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மூத்த வீரர்கள், போரில் உயர் நீத்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு மலர் மரியாதை செலுத் தினர். முதல் ஓபியம் போர் (1840-1842) காலகட்டம் முதல் தற்போது வரை தேசத்தின் சுதந்திரத்துக்காக போராடி உயிர் நீத்தவர்கள் அனைவருமே தியாகிகள்தான் என அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் சுதந்திரத்துக்காகவும், புதிய சீனத்தைக் கட்டமைக்கும் போரிலும் உயிரிழந்தவர்கள் 2 கோடிப்பேர் என மதிப்பிடப் பட்டுள்ளது. இருப்பினும், இவர்களில் 1.93 கோடிப் பேர்களின் பெயர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு முதல்தான் செப்டம்பர் 30-ம் தேதி தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in