Last Updated : 22 Oct, 2015 07:16 PM

 

Published : 22 Oct 2015 07:16 PM
Last Updated : 22 Oct 2015 07:16 PM

சர்வதேச ஊடகங்கள் வர்ணித்த இந்த நூற்றாண்டின் விவாகரத்து

ரஷ்ய கோடீஸ்வரர் செய்திருக்கும் உறவு முறிவை இந்த நூற்றாண்டின் விவாகரத்தாக சர்வதேச ஊடகங்கள் வர்ணித்துள்ளன. இவர் தனது முன்னாள் மனைவிக்கு உலகின் அதிகபட்ச ஜீவனாம்சம் தந்திருப்பதே இதற்கு காரணம்.

ரஷ்ய கோடீஸ்வரரான டிமிட்ரி ரைபோலேவேவ்(47) - எலினா தம்பதிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

அப்போது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள 4.2 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 26 ஆயிரத்து 400 கோடி) ஜீவனாம்சத்தை விவாகரத்து செய்ய முன்வந்த தனது கணவர் டிமிட்ரி அளிக்க வேண்டும் என்று எலினா கோரியிருந்தார்.

இதனை தற்போது டிமிட்ரி ஏற்றுக் கொண்டுள்ளார். தங்களுக்குள் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த முன்னாள் தம்பதி அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் ஜீவனாம்சமாக வழங்க இருக்கும் உரிய தொகை அதில் குறிப்பிடப்படவில்லை.

2010-ஆம் ஆண்டில் டிமிட்ரி ரைபோலேவேவின் சொத்துமதிப்பு 6.5 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டது. தற்போது 100 பில்லியன் டலர் என கணக்கிடப்பட்டு உள்ளது. கருத்து வேறுபாடு காரணத்தால் இருவரும் ஒருமித்து விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் இவர்களது வழக்கு சுமூகமாக முடிந்திருக்கிறது.

அதன்படி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனைவி எலினாவுக்கு 4.2 பில்லியன் டாலர் சுவிஸ் பிராங்க்ஸ் வழங்க உத்தரவிட்டுள்ளார். தீர்ப்பு வழங்கப்பட்ட சில நிமிடங்களில் நீதிமன்ற வளாகத்தில் ஜீவனாம்ச தொகைக்கு ஈடான பத்திரத்தை முன்னாள் மனைவியிடம் டிமிட்ரி வழங்கி சென்றார்.

அது மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள டிமிட்ரிக்கு சொந்தமான சொகுசு பங்களா, கிரிஸ் தீவில் உள்ள பங்களாவையும் மனைவி எலினாவுக்கு கொடுக்க அத்தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது.

இந்த விவாகரத்து வழக்கில் முதல்முறையாக மிக அதிக தொகையாக ஜீவனாம்சமாக வழங்கப்பட்டிருப்பதால், உலகிலேயே விலையுயர்ந்த விவாகரத்தாக சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வர்ணித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x