

பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ராணுவம் குற்றம் சுமத்தி உள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில், “பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இயங்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் வியாழக்கிழமை இரவு இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் தரப்பும் பதிலடி அளித்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுகுள் நுழைய ரகசிய சுரங்கங்களை தோண்டியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து பாலஸ்தீனர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் ஹமாஸ் தீவிரவாதிகளும் இஸ்ரேலின் ஆதிக்கத்துக்கு எதிராக அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, ஜெருசலமே இஸ்ரேலின் தலைநகரம் என்று அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது இந்த நிலையல் மத்திய கிழக்குப் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் மத்தியஸ்தராக இருந்தது அமெரிக்கா.
ஏனெனில், பாலஸ்தீனத்துக்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவோ கூடாது என்ற முடிவில் மேற்கு ஆசிய நாடுகள் நீண்டகாலமாக இருந்தன. எனினும், 1979-ல் எகிப்துடனும் 1994-ல் ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனது முழுமையான வெளியுறவுத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது.
இந்த நிலையில் பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் 2 நாடுகளுடன் இஸ்ரேல் ஒப்பந்தம் மேற்கொண்டது.