

ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் தடுப்பு மருந்து பரிசோதனையின் மூன்றாவது கட்டம் அனைவரும் எதிர்பார்த்தப்படி நல்ல செய்தியாகவே உள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து, பல்வேறு நாடுகளில் கிளினிக்கல் பரிசோதனையை மனிதர்களுக்கு நடத்தி வருகின்றன.
இதில் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் மூன்றகட்ட மருத்துவ பரிசோதனைகள் அனைவரும் எதிர்பார்த்தப்படி நல்ல செய்தியாகவே உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து வைரலாஜி மருத்துவரும், ஆய்வாளருமான டேவிட் கூறும்போது, “ இது ஒரு முக்கியமான ஆய்வாகும், ஏனெனில் இந்த தடுப்பூசிக்கு அடிப்படையான மரபணு வழிமுறைகள், பாதுகாப்பாகவும் முடிந்தவரை விரைவாக உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. மேலும் அவை மனித உடலில் செலுத்தும்போது அவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நாம் எதிர்பார்த்தப்படி தடுப்பு மருந்து செயல்படுகிறது. இது நல்ல செய்தி” என்று தெரிவித்தார்.
உலகம் முழுவதும் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 3 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.