Last Updated : 18 Oct, 2020 03:03 PM

 

Published : 18 Oct 2020 03:03 PM
Last Updated : 18 Oct 2020 03:03 PM

குளிர்பதனத்தில் பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட் மீது  நீண்டநாள் உயிர் வாழும் கரோனா வைரஸ்: சீனாவில் கண்டுபிடிப்பு

பெய்ஜிங்

குளிர்ப்பதன பெட்டிகளில் இறக்குமதி செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட் மீது நீண்டநாள் உயிர் வாழும் கரோனா வைரஸை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் முதல்முறையாக குளிர்-சங்கிலி தொடர்ச்சியில் விற்பனைக்கு வரும் உணவுப் பொருள்களின் வெளிப்புற பேக்கேஜிங்கிலிருந்து கரோனா வைரஸ் கண்டறியப்பட்டு அப்பொருட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கடல் மீன்களின் வெளிப்புற பேக்கேஜிங்கில் வாழும் கரோனா வைரஸைக் கண்டறிந்து தனிமைப்படுத்தியதை சீன அதிகாரிகள் உறுபடுத்தியுள்ளதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துறைமுக நகரமான கிங்டாவோவில் அமைந்துள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையம் (சி.டி.சி) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதுகுறித்து விளக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த அறிக்கை, எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த நாட்டின் பெயரை குறிப்பிடப்படவில்லை.

உலகில் முதல்முறையாக குளிர்சாதனங்களில் பதப்படுத்தப்பட்ட உணவின் வெளிப்புற பேக்கேஜிங்கிலிருந்து கரோனா வைரஸ் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இது தொடர்பாக 11 மில்லியன் மக்கள் பரிசோதிக்கப்பட்டு புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன, சோதனைகளுக்குப் பிறகு வேறு எந்த புதிய பாதிப்பு வழக்குகளும் கிடைக்கவில்லை.

கடந்த ஜூலை மாதம், குளிர்சாதனக் கொள்கலனின் உள் சுவரிலும் பாக்கெட்களிலும் கொடிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து உறைந்த இறால் இறக்குமதி செய்வதை சீனா நிறுத்தியது. கிங்டாவோவில் இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கொள்கலனின் வெளிப்புற பேக்கேஜிங்கில் உயிருள்ள வைரஸைக் கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டது.

நகரத்தில் அண்மையில் பதிவாகிய தொற்றுநோய்களின் மூலத்தைக் கண்டறியும் விசாரணையின் போது இந்த கண்டுபிடிப்பு செய்யப்பட்டது. மாசுபடுத்தப்பட்ட பாக்கெட்களில் உயிர்வாழும் கரோனா வைரஸ் தொடர்பு தொற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதை இது நிரூபித்துள்ளது.

ஆபத்து மிகக் குறைவு

சீன சந்தைகளில் குளிர்பதனத்தில் வைக்கப்பட்டு விநியோகிக்கப்படும் பாக்கெட் உணவுகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மாதிரிகளை சமீபத்திய நியூக்ளிக் அமில சோதனைகளுக்கு உட்படுதப்பட்டன. அச்சோதனைகளின்போது கரோனா வைரஸ் பாதிப்பில் மாசுபடுவதற்கான ஆபத்து மிகக் குறைவு என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15 -ம் தேதிக்குள் நாட்டின் 24 மாகாண அளவிலான பிராந்தியங்களில் மொத்தம் 2.98 மில்லியன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, இதில் 670,000 குளிர் சங்கிலி உணவு அல்லது உணவு பேக்கேஜிங், 1.24 மில்லியன் உழைக்கும் ஊழியர்களிடமிருந்தும், 1.07 மில்லியன் சுற்றுச்சூழலிலிருந்தும் சோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.

குளிர்-சங்கிலி உணவு அல்லது உணவு பேக்கேஜிங்கில் இருந்து 22 மாதிரிகள் மட்டுமே வைரஸுக்கு சாதகமாக சோதிக்கப்பட்டதாக சிடிசி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இறக்குமதி செய்யப்பட்ட குளிர்ப்பதனங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் பாக்கெட்களின் மீது, ஷாங்காயில் ஐந்து, குவாங்டாங்கில் நான்கு, ஷாங்க்சியில் இரண்டு மற்றும் தியான்ஜின் மற்றும் சிச்சுவான் ஆகிய இடங்களில் தலா ஒன்று என பரிசோதனை முடிவுகளில் கோவிட் 19 வழக்குகள் பதிவாகியுள்ளன. தேசிய சுகாதார ஆணையம் 13 உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 வழக்குகள் சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் பரவும் புதிய COVID-19 வழக்கு எதுவும் இல்லை என்று அது கூறியுள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை 85,672 ஐ எட்டியுள்ளது. இவர்களில் குணமாகியபின் மொத்தம் 80,786 நோயாளிகள் வீடு திரும்பியுள்ளனர், அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 4,634 ஆக உள்ளது என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x