அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவன்: ட்ரம்ப் ஆவேசம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவன்: ட்ரம்ப் ஆவேசம்
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடக்கிறது. இதில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் களம் இறங்கியுள்ளார். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ட்ரம்ப் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜார்ஜியாவில் ட்ரம்ப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

ஜனநாயக கட்சியினர் அமெரிக்காவை கம்யூனிஸ்ட் நாடாக மாற்ற விரும்புகிறார்கள். அவர்களிடம் ஒன்றுமே இல்லை. உங்களது மதிப்புகள் மீது வெறுப்புகள் இருக்கிறது. மிகவும் மோசமான வேட்பாளருடன் போட்டியிடுகிறேன்.

அப்படி நடந்தால் நான் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன். தேர்தலில் தோற்றால் நான் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம். அவ்வாறு வெளியேறுவதே நல்லது.

இவ்வாறு ட்ரம்ப் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in