

சவுதி அரேபியாவில் மினா நகரில் நெரிசலில் சிக்கி இறந்தவர்களில் 3 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் அடங்குவர்.
ஹஜ் புனித பயணத்தின் முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் சவுதியின் மினா நகரில் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 719 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் காய மடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 15 பேர் உயிரிழந் துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின் றனர். இறந்தவர்களில் மயிலாடுதுறையை சேர்ந்த சம்சுதீன் முகமது இப்ராஹிம் (60), தென்காசியை சேர்ந்த மொகிதீன் பிச்சை (65), திருச்சியை சேர்ந்த ரெமிஜென் (51) ஆகியோர் அடங்குவர்.
இவர்கள் தவிர குஜராத் மாநிலத் தைச் சேர்ந்த 9 பேரும், ஜார்க் கண்டை சேர்ந்த இருவர் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதனை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டர் மூலம் வெளியிட்ட தகவலில் உறுதிப்படுத்தியுள்ளார்.
யாத்ரீகர்கள் அறிவுறுத்தல் களை முறையாக கடைபிடிக் காததே 719 பேர் இறந்ததற்கு காரணம் என்று சவுதி அரேபிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை யில் மேலும் கூறப்பட்டுள் ளதாவது: மினா நகரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள் யாத்ரீகர்களுக்கு சில உத்தரவு களையும், அறிவுறுத் தல்களையும் தொடர்ந்து கூறி வந்துள்ளனர். ஆனால் சிலர் அவற்றை மீறி நடந்து கொண் டுள்ளனர். இதன் காரணமாக நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காயமடைந்த வர்களுக்கு உரிய சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.