Published : 17 Oct 2020 06:03 PM
Last Updated : 17 Oct 2020 06:03 PM

ஜோ பிடனுக்கு ஆதரவாக ஒபாமா பிரச்சாரம்

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3 ஆம் நாள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக ஒபாமா அடுத்த வாரத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஜோ பிடன் பிரச்சார குழு கூறும்போது, “அக்டோபர் 21 ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பென்சில்வேனியாவில் ஜோ பிடனுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்” என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேறு எந்தத் தகவலையும் ஜோ பிடன் பிரச்சாரக் குழு தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார் என்று ட்ரம்ப் விமர்சித்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x