நியூசிலாந்து பொதுத்தேர்தல்: ஜெசிந்தா ஆர்டென் வெற்றி

நியூசிலாந்து பொதுத்தேர்தல்: ஜெசிந்தா ஆர்டென் வெற்றி
Updated on
1 min read

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஜெசிந்தா ஆர்டென் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து நியூசிலாந்து ஊடகங்கள் தரப்பில், “நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான ஜெசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டென் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி குறித்து ஜெசிந்தா கூறும்போது, “அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைய பணிகள் உள்ளன. கரோனா நெருக்கடியிலிருந்து நாட்டைச் சிறப்பாகக் கட்டமைப்போம்” என்றார்.

இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெசிந்தாவுக்குப் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் சிறப்பாகச் செயால்பட்டதன் காரணமாக சர்வதேச நாடுகளால் பாராட்டப்பட்டார். இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாக ஜெசிந்தா மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in