

தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் உலக முழுவதும் 2.8 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதுகுறித்து வோல்டோ மீட்டர் வெளியிட்ட தகவலில், “ கரோனா தொற்றுக்கு 3 கோடிக்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 2.8 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. இதில் அமெரிக்காவில் 80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.