குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் நகரங்களை பின்னுக்கு தள்ளிய இந்திய கிராமங்கள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் நகரங்களை பின்னுக்கு தள்ளிய இந்திய கிராமங்கள்
Updated on
1 min read

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் இந்திய கிராமங்கள் நகர்ப்புறங்களை பின்னுக்குத் தள்ளி முன்னேறி இருப்பதாக ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இது ஏற்கெனவே வெளி யான ஆய்வுக்கு முரணாக உள்ளது.

இதுதொடர்பாக அமெரிக் காவின் மிச்சிகன் பல்கலைக் கழகத்தின் பொதுமக்கள் சுகாதார கல்வி நிறுவனம் சார்பில் மேற்கொண்ட ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இந்திய நகரங்களில் பல்வேறு குடிசைப்பகுதிகள் காணப்படுகின்றன. அங்கெல் லாம் சுகாதார வசதிகள் சென் றடைவதில்லை. ஆனால் கிராமங் களைப் பொருத்தவரை அரசு மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடப்படுகிறது.

இதுதவிர, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொது சுகாதார மையங்கள் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை கிராமங்களில் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக, இந்தியா வில் 1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடு வதில் நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்கள் சிறந்து விளங்குகின்றன.

தடுப்பூசி மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னணியில் இருந்தபோதிலும் உலகில் உள்ள தடுப்பூசி போடப்படாத குழந்தைகளில் 3-ல் ஒன்று இந்தியாவில்தான் உள்ளன. இந்தியாவில் 57 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்படுகின்றன.

தடுப்பூசியைப் பொருத்தவரை இந்து குடும்ப குழந்தைகளைவிட முஸ்லிம் குடும்ப குழந்தைகள் பின்தங்கி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in