Published : 10 Oct 2020 09:15 PM
Last Updated : 10 Oct 2020 09:15 PM

சவுதியில் குறையும் கரோனா தொற்று

சவுதி அரேபியாவில் கரோனா தொற்று குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சவுதி சுகாதாரத்துறை தரப்பில், “சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 405 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 22 பேர் பலியாகி உள்ளனர். சவுதியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று குறைந்து வருகிறது. இதுவரை சவுதியில் 3,24,737 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,018 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், பரவலைத் தடுக்கும் பொருட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் மெக்கா மசூதிக்குள் யாத்ரீகர்களையும், உள்ளூர் மக்களையும் தொழுகை நடத்த சவுதி அரேபிய அரசு அனுமதிக்கவில்லை. புனிதப் பயணம் வரும் வெளிநாட்டு மக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. புனித ரமலான் பண்டிகையன்று கூட மக்கள் யாரையும் தொழுகை நடத்த அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. முதல் நாளான இன்று மெக்கா புனித மசூதிக்குள் அதிகபட்சமாக 6 ஆயிரம் யாத்ரீகர்கள் மட்டும் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர்.

வெளிநாட்டு யாத்ரீகர்கள் யாருக்கும் அனுமதியளிக்காமல், உள்நாட்டு மக்களுக்கு மட்டும் தொழுகை நடத்த முதல் கட்டமாக அனுமதிக்கப்படுகின்றனர். நபர் ஒருவர் தொழுகை நடத்தி முடிக்க 3 மணிநேரம் அவகாசம் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x