Published : 10 Oct 2020 09:56 AM
Last Updated : 10 Oct 2020 09:56 AM

ட்ரம்ப்- பிடன் இடையே நடைபெறவிருந்த 2-வது நேருக்கு நேர் விவாதம் ரத்து 

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே விவாதம் நடைபெறுவது வழக்கம். ட்ரம்ப்-பிடன் இடையே நடைபெற்ற முதல் விவாதம் கூச்சலும் குழப்பமுமாக முடிய, இரண்டாவது விவாதம் ட்ரம்ப் கரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதாவது நேரடி விவாதம் வேண்டாம் மெய்நிகர் விவாதம் செய்யலாம் என்று ஆலோசனை வழங்கப்பட, கோவிட்-19 பாதிக்கப்பட்ட ட்ரம்ப் மெய்நிகர் விவாதத்துகு ஒத்துக் கொள்ளாததால் 2வது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆகவே அக்.15ம் தேதி விவாதம் இல்லை, இதனையடுத்து டெனிசீ நாஷ்வில்லில் அக்டோபர் 22ம் தேதி ஒரு விவாதம் மீதமுள்ளது.

ட்ரம்ப் வைரஸிலிருந்து மீண்டு விட்டாரா என்பது தெரியாத நிலையில் தான் அவருடன் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

ஆனால் அதிபர் ட்ரம்ப் கரோனாவிலிருந்து முழுதும் மீண்டு விட்டாரா என்றே தெரியாத நிலையில் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாகப் பங்கேற்கவுள்ளார். வெள்ளை மாளிகை பால்கனியிலிருந்து அவர் உரையாற்றுகிறார். நூற்றுக்கணக்கானோர் மட்டுமே இந்தக் கூட்டத்துக்கு வருகை தரவுள்ளனர். அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம்.

தான் வைரஸுக்காக மீண்டுமொருமுறை டெஸ்ட் செய்யப்பட்டதாகவும் ஆனால் முடிவு தெரியவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும் கரோனா மருந்துகள் எடுத்துக் கொள்வதையும் அவர் தவிர்த்து விட்டார், ‘நான் நல்ல வலுவுடன் தான் இருக்கிறேன்’ என்கிறார் ட்ரம்ப்.

இந்நிலையில் ட்ரம்ப் நேரடியாகப் பிரச்சாரம் செய்வதை கிண்டல் செய்த பிடன், “குட் லக். நீங்கள் மாஸ்க் அணிந்து இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வரை நான் நேரில் உங்களைச் சந்திக்கப் போவதில்லை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x