Published : 08 Oct 2020 09:27 PM
Last Updated : 08 Oct 2020 09:27 PM

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு 3.6 கோடியாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.6 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், “சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 3.6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவத் தொடங்கியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வருட இறுதியில் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x