படம் உதவி: ட்விட்டர்
படம் உதவி: ட்விட்டர்

அன்று  டீ விற்பனையாளர் இன்று  முதலாளி

Published on

பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் கான் என்பவர் 'chaiwala ' என்று அனைவராலும் அறியப்படுகிறார். சமூக வலைதளங்கள் மூலம் சிலரது வாழ்க்கை முறையே மாறி விடும் அதற்கு உதாரணமாகி இருக்கிறார் அர்ஷத் கான்.

அர்ஷத் கான் டீ க்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் 2016 -ம் ஆண்டு ஜியா அலி என்பவர் எடுத்த புகைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அந்த புகைப்படம் வாழ்க்கையை மாற்றியது. அவரது நீல நிற கண்களால் சமூக வலைதளங்களில் ஒரே நாளில் அவர் வைரலானார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மாடலிங் வாய்ப்புகளும் கிடைத்தன.

இந்த நிலையில் மீண்டும் அர்ஷத் கான் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்திருக்கிறார். காரணம் தற்போது இஸ்லாமாபாத்தில் சொந்தமாக கஃபே (‘Cafe Chaiwala Rooftop) ஒன்றை தொடங்கி உள்ளார் அர்ஷத் கான்.

இதுகுறித்து அர்ஷத் கான் கூறும்போது, “ பலரும் Chaiwala என்ற பெயரை நீக்குமாறு கூறினர். ஆனால நான் அதனை ஏற்கவில்லை. அது எனக்கான அடையாளம். எனது கடையின் சிறப்பு என்னவென்றால் இது பாரம்பரியமானது” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in