கருந்துளை உருவாக்கம் குறித்த ஆய்வு: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு; 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

கருந்துளை உருவாக்கம் குறித்த ஆய்வு: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு; 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
Updated on
1 min read

இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும் மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

அந்த வகையில் மருத்துவத்துக்கான 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பிரிட்டன், அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க விஞ்ஞானி ஹார்வே ஜே.ஆல்டர் (வைராலஜிஸ்ட்), பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன், அமெரிக்க விஞ்ஞானி சார்லஸ் எம். ரைஸ் (பேராசிரியர் ராக்கர் ஃபெல்லர் பல்கலைக்கழகம்) ஆகியோருக்கு கூட்டாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் செல்களை அழித்தல் நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் ரத்தத்தில் பரவும் ஹெபாடைடிஸ் வைரஸுக்கு எதிராக கண்டுபிடிப்புகளைச் செய்தமைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. 2020ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

கருந்துளை உருவாக்கம் குறித்த பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவன கணிப்பை கண்டுபிடித்ததற்காக ரோஜர் பென்ரோசுக்கும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளை கண்டுபிடித்ததற்காக ரின்ஹெர்ட் கென்செல், ஆன்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

பரிசுத்தொகையில், ரோஜர் பென்ரோசுக்கு 50 சதவீதமும், ரின்ஹெர்ட் கென்செல், ஆன்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு தலா 25 சதவீதமும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in