Published : 05 Oct 2020 10:32 PM
Last Updated : 05 Oct 2020 10:32 PM

ஈரானில் அதிகரிக்கும் கரோனா

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,902 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், “ ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,902 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 475,674 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 235 பேர் கரோனாவுக்கு பலியாக ஈரானி கரோனா பலி எண்ணிக்கை 27,192 ஆக உள்ளது. 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஈரான் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x