

தைவானில் பெடா- பிராணிகள் நலச்சங்கத்தினர் கொடுத்த புகார் தொடர்பாக விரிவான விசாரணையை அந்நாட்டு காவல் துறை நடத்தி வருகிறது.
தைவானில் புறா பந்தயம் என்ற பெயரில் ஆண்டுக்கு 15 லட்சம் பறவைகள் கொல்லப் படுவதாக பெடா சார்பில் ஆய் வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய தைவான் காவல் துறை ஃபெங்யுவான் புறா சங்கத்தி னரிடமிருந்து சுமார் ரூ.13 கோடி ரூபாய் சூதாட்டப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். 129 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
“இந்த சங்கத்தினர் சூதாட்ட குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், பிராணிகள் வதை நடைபெறுவதற்கான சூழல் எதையும் காணவில்லை” என தைவான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.