Published : 03 Oct 2020 07:08 AM
Last Updated : 03 Oct 2020 07:08 AM

அமேசான் நிறுவன ஊழியர்கள் 20,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது ஊழியர்களின் கரோனா தொற்று புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அமேசான் மளிகைப் பொருட்கள் விற்பனை அங்காடிகளில் பணிபுரிபவர்கள் உட்பட 13.7 லட்சம் ஊழியர்கள் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

இவர்களில் 19,800 பேருக்கு மார்ச் மாதம் முதல் தற்போது வரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை எதிர்பார்த்ததை விடவும் குறைவு என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் உள்ள ஊழியர்கள் சிலர் கரோனா நோய்த் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் நிறுவனத்தின் ஏற்பாடுகள் குறித்தும், தொற்று பாதிக்கப்பட்ட ஊழியர்களின் விவரங்களை வெளியிடுவது குறித்தும் நிறுவனத்துக்கு எதிராக விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். இதையடுத்தே அமேசான் நிறுவனம் இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் 650 தளங்களில் தினமும் 50 ஆயிரம் பேருக்கு கரோனா சோதனை செய்வதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் நோய் தொற்று தொடங்கியதில் இருந்தே ஊழியர்களுக்குத் தேவையான விழிப்புணர்வை வழங்கி வருவதாகவும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் பிற ஊழியர்களுக்குத் தெரியப்படுத்த தவறியதில்லை எனவும் அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.

தொற்று பரவலின் அடிப்படையில் அமேசான் நிறுவனத்தில் 33,000 பேருக்கு தொற்று வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 20,000 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x