இந்தியாவில் புலிகளை பாதுகாக்க அமெரிக்கா தொழில்நுட்ப உதவி: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தயார்

இந்தியாவில் புலிகளை பாதுகாக்க அமெரிக்கா தொழில்நுட்ப உதவி: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தயார்
Updated on
1 min read

வன உயிரின பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத வனவிலங்கு உறுப் புகள் கடத்தலைத் தடுப்பதில், இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியாவும் அமெரிக்காவும் முன் வந்துள்ளன. இதன் ஒருபகுதியாக இந்தியாவில் வங்கப்புலிகளை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் தேவையான தொழில்நுட்ப உதவியை அமெரிக்கா வழங்க உள்ளது.

இதுதொடர்பாக இருநாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளன.

இந்திய இயற்கை வாழிடங் களில் வங்கப் புலிகளை பாது காக்கும் ‘புராஜக்ட் டைகர்’ திட்டத் துக்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகளை அளிக்க அமெரிக்கா உடன்பட்டுள்ளது.

இந்தியா அமெரிக்கா இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற உத்திப்பூர்வ மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியான கூட்டறிக்கையிலும் இதுதொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் புலிகளை வேட்டையாடுதலைத் தடுத்தல், பாதுகாத்தலில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கலான வாழிடங்களைப் பாதுகாத்தல், வனப்பாதுகாப்பு திட்டங்களில் அறிவியல் தரவுகள் மேலாண்மையில் மனித வளமேம்பாடு, பொதுமக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத் துதல், அழிவுப்பட்டியலில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், சட்டங்களை நடை முறைப்படுத்துவதை உறுதிப் படுத்துதல், வேட்டையாடுதல், வனவிலங்கு உறுப்புகள் விற்பனை யைத் தடுத்தல் உள்ளிட்ட துறை களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

இந்தியாவின் திறன் மேம்பாட்டு திட்டத்துக்கு உதவும் வகையில் அடுத்த 10 ஆண்டுகளில் 40 கோடி இந்தியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கும் திட்டத்தில் உதவ உள்ளது.

கல்வி சார்ந்த ஏராளமான திட்டங்களில் இந்தியாவுக்கு உதவ இருப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொருளாதார மேம்பாட்டுக்கு உயர் கல்வி, தொழிற் பயிற்சி அவசியம் என்பதை உணர்ந்துள் ளோம். மாணவர்கள், கல்வியியலா ளர்கள், தொழில்நுட்ப அறிவை பரிமாறிக் கொள்வதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in