Published : 02 Oct 2020 01:05 PM
Last Updated : 02 Oct 2020 01:05 PM

கரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும்: ட்ரம்புக்கு இம்ரான் கான் வாழ்த்து 

கரோனா தொற்றினால் பாதிக்கப்பக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் விரைவில் குணமடைய இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். இதுவரை அமெரிக்காவில் 74 லட்சத்து 94 ஆயிர்தது 671 பேர் கரோனாவில் பாதி்க்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 12 ஆயிரத்து660 பேர் உயிரிழந்துள்ளனர். 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்.

அமெரிக்காவில் தீவிரமாக கரோனா வைரஸ் பரவிய நேரத்தில் கூட முகக்கவசம் அணியாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலம் வந்தார். இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் ஆலோசகர் ஹிக்ஸ் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரைவில் குணமடைய உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானிய ட்ரம்ப் விரைவி குணடைய விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x