Published : 29 Sep 2015 01:04 PM
Last Updated : 29 Sep 2015 01:04 PM

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: புதிய ஆதாரங்களுக்காக நாசாவை கவுரவித்த கூகுள்

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை கண்டுபிடித்துள்ள நாசாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதத்தில் இன்றைய கூகுள் டூடுல் முகப்புப் பக்கம் மாற்றப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட அமெரிக்காவின் நாசா விண்கலன் நேற்று (திங்கள்கிழமை) புதிய படங்களை அனுப்பியது. அந்தப் புகைப்படங்களில், பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும் நீண்ட நீரோடைகள் இருப்பதைக் காட்டும் ஆதாரங்கள் இடம்பெற்றிருந்தன.

இது தொடர்பாக வாஷிங்டன்னில் செய்தியாளர்களை சந்தித்த நாசா விஞ்ஞானிகள், "செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் தண்ணீர் இருப்பது உறுதியாகியுள்ளது. கிரகத்தின் மேற்பரப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மைகொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அந்த கிரகம் இன்னமும் புவியியல் ரீதியில் உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்கிறது.

எனவே, நீரோட்டம் இருப்பதால் செவ்வாய் கிரகத்தில் எளிமையான உயிரிகளும் இருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகியிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து அங்கு மனிதர்கள் வசிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை விஞ்ஞானிகள் தொடர உள்ளனர்" எனத் தெரிவித்தனர்.

மிகவும் வியக்கத்தக்க, பலன் தரக்கூடிய இந்த செய்தியை பாராட்டும் விதமாக கூகுள் நிறுவனம் இன்றைய டூடுலை தனது முகப்பில் மாற்றியுள்ளது.

கூகுளின் முகப்புப் பக்கத்தில் இருக்கும் அந்த டூடுலை கிளிக் செய்தால், செவ்வாய் கிரகம் குவளையில் இருக்கும் தண்ணீரை ஸ்ட்ரா மூலம் குடிப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x