Published : 08 Sep 2015 10:22 AM
Last Updated : 08 Sep 2015 10:22 AM

அமெரிக்காவில் இந்திய மாணவி தற்கொலை சம்பவம்: அமேசான் நிறுவனம் மீது தாய் வழக்கு

அமெரிக்காவில் இந்திய மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவருக்கு சயனைடு விற்ற அமேசான் நிறுவனம் மீது மாணவியின் தாயார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் பெனிஸ் வேனியா பல்கலைக்கழகத்தில் நர்ஸிங் படித்த ஆர்யா சிங் கடந்த 2011-ம் ஆண்டில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் கல்லூரிக்கு ஒழுங்காகச் செல்லாமல் விரக்தியில் வாழ்ந்து வந்தார்.

கடந்த 2013 பிப்ரவரி 8-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் அவர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில் அமேசான் இணையதள வர்த்தக நிறுவனம் மூலம் தாய்லாந்தை சேர்ந்த வியாபாரியிடம் இருந்து ஆர்யா சிங் சயனைடு வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தனது மகளின் மரணத்துக்கு நீதி கோரி ஆர்யா சிங்கின் தாயார் சுஜாதா சிங் அமேசான் நிறுவனம் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது பிலடெல்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x