விஷம் வைத்ததன் பின்னணியில் புதின் இருக்கிறார்: அலெக்ஸி நவால்னி திட்டவட்டம்

விஷம் வைத்ததன் பின்னணியில் புதின் இருக்கிறார்: அலெக்ஸி நவால்னி திட்டவட்டம்
Updated on
1 min read

எனக்கு விஷம் வைத்ததன் பின்னணியில் ரஷ்ய அதிபர் புதின் தான் இருக்கிறார் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் அலெக்ஸி நவால்னி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெர்மனியை சேர்ந்த இதழ் ஒன்றுக்கு முதல்முதலாக பேட்டி அளித்திருக்கிறார் ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி.

அதில் அலெக்ஸி நவால்னி கூறியதாவது, “ இது புதினின் திட்டம்தான். எனக்கு விஷம் அளிக்கப்பட்டதன் பின்னணியில் புதின் தான் இருக்கிறார் ஆனால் இதனை புதின் எவ்வாறு செய்தார் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை” என்றார்,

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமசித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்து. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது.

அலெக்ஸி கடந்தவாரம்தான் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in