பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 3,12,263 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 3,12,263 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 747 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் , “பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 747 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,12,263 ஆக அதிகரித்துள்ளது. 2,96,881 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர். 6,479 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 500க்கும் குறைவாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது 700 ஆக கரோனா தொற்று பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இவ்விரு மாகாணங்களில் தற்போது கரோனா கட்டுக்குள் இருப்பதாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்குப் பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in