Published : 30 Sep 2020 02:07 PM
Last Updated : 30 Sep 2020 02:07 PM

புதினின் நாய்க்குட்டி போல் ட்ரம்ப் செயல்படுகிறார்: ஜோ பிடன் விமர்சனம்

ரஷ்ய அதிபர் புதினின் நாய்க்குட்டி போன்று ட்ரம்ப் செயல்படுவதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை ஜோ பிடன் கூறும்போது, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவுக்கு எதிராகச் செயல்படத் தவறிவிட்டார். ரஷ்ய அதிபர் புதினின் நாய்க்குட்டி போல் ட்ரம்ப் செயல்படுகிறார். நாங்கள் புதினுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். நாங்கள் ட்ரம்ப் போல செயல்பட மாட்டோம்” என்றார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவுதலைத் தடுப்பதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சரியாகச் செயல்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்று ஜோ பிடன் விமர்சித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்போ, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் உலக நாடுகள் அமெரிக்காவைப் பார்த்துச் சிரிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்று விமர்சித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடனும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x