Published : 28 Sep 2020 08:18 PM
Last Updated : 28 Sep 2020 08:18 PM

வடகொரியாவால் கொல்லப்பட்ட அதிகாரியைத் தேடும் பணி நீட்டிப்பு: தென்கொரியா

வடகொரியாவால் கொல்லப்பட்ட தென்கொரியாவைச் சேர்ந்த மீன்வளத் துறை அதிகாரியின் உடலைத் தேடும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய அதிகாரிகள் தரப்பில், ''வடகொரியாவால் கொல்லப்பட்ட மீன்வளத் துறை அதிகாரியைத் தேடும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தேடும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவால் கொல்லப்பட்ட அந்த அதிகாரி கடலில் எரிக்கப்பட்டிருக்கிறார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தத் தேடுதலில் நாங்கள் துணை இருப்போம் என்று வடகொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவத்துக்கு வடகொரியா தரப்பில் மன்னிப்பும் கேட்கப்பட்டது.

வடகொரியாவின் எல்லைப் பகுதி நகரான கேசாங்கில் கரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைத்தும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இந்த ஊரடங்கை கிம் நீக்கி இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

மேலும், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் எல்லை மூடலை வடகொரியா தொடரும் என்றும், பிற நாடுகளின் உதவி இதில் தேவை இல்லை என்றும் வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கரோனா பரவலைத் தடுக்க அதிபர் கிம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x