

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு ஆதரவான, 'பிரவுட் பாய்ஸ்' என்ற வலது சாரி அமைப்பின் பேரணி, போதிய ஆதரவாளர்கள் வராததால் பிசுபிசுத்தது.
அரசியல் நோக்கம் கொண்ட வன்முறைக்குப் பெயர் பெற்றது இந்த பிரவுட் பாய்ஸ் குழு. இந்தக் கூட்டட்துக்கு 10,000 பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள்தான் வந்தனர். இதனையடுத்து 90 நிமிடங்களில் பேரணி முடிந்தது. நீண்ட நேரம் இந்தப் பேரணி திட்டமிடப்பட்டது.
ஆனால் வலது சாரி ஆதரவு குறைந்த காரணத்தினால் கூட்டம் பிசுபிசுத்துப் போனது.
அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். வலது சாரி அமைப்புகள் பல, டிரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதில் ஒன்றான, பிரவுட் பாய்ஸ் அமைப்பு, ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்டில், பிரமாண்ட பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்தது. வெள்ளை நிற மக்களுக்காக இயங்கி வரும் இந்த அமைப்பின் பேரணியில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், 'இந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்பின அமைப்புகள் சார்பிலும் எதிர்ப்பு பேரணி நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று நடந்த பேரணியில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே டிரம்ப் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மேலும், 90 நிமிடங்களுக்குள் நிகழ்ச்சி முடித்து கொள்ளப்பட்டது.
ஆன்ட்டிஃபா மற்றும் பிற இடதுசாரிகளுக்கு எதிராக கடும் வெறுப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வலதுசாரி பிரவுட் பாய்ஸ் கோஷத்தில் ட்ரம்ப் ஆதரவு மேலோங்க, மற்ற இடங்களில் நடந்த இடது சாரி கோஷங்களில் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ஆதரவுக்குரல் எழுப்பப்படவில்லை.
ட்ரம்ப் அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகே பிரவுட் பாய்ஸ் என்ற வலதுசாரி வெள்ளை இனவெறிக்கும்பல் 2016-ல் தொடங்கப்பட்டது. ‘மேற்கத்திய ஆதிக்கவாதிகள்’ என்று அழைத்துக்கொள்ளும் இந்தக் குழுதான் சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போக்குகள் கொண்டது, எல்லைகளை மூடுதல் சுவர் எழுப்புதல் ஆகியவற்றையும் போலீஸ் அடக்குமுறையை ஆதரித்தும் பேசி வரும் கும்பலாகும் இது.
இந்நிலையில் இவர்களது பேரணி தோல்விகண்டதையடுத்து விமர்சகர்கள் அங்கு கொண்டாடி வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி கூறுகிறது.