

எகிப்து பயங்கரவாத பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையில் குறைந்தது 98 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
வட சினாயில் எகிப்து பயங்கரவாத பாதுகாப்பு படைகள் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையில் குறைந்தது 98 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் மொஹமத் சமீர் கூறியுள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மொர்ஸி பதவியிலிருந்து விலகியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டங்கள் முதலிலிருந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில் அதிகப்படியான ராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தாக்குதல்ச் சம்பவம் அங்கு சமீப காலங்களில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.